Saturday 23 November 2019

ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார்


          Image may contain: 1 person, sitting and indoor
"வெல்லக் கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன் மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது.  ஸாயீ பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்க வேண்டும்.  அதைப் பொறுத்தே ஸாயீ உங்களை கிருபை செய்து பாதுகாப்பார் !"
 

Sunday 3 November 2019

நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன்?


           Image may contain: one or more people


ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார். (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் )