கண்டேபா கோவில் பூசாரியும் பாபாவின்
மிக நெருங்கிய பக்தருமான மஹல்சபாதியின் மகன் ஸ்ரீமார்த்தாண்ட் என்பவர்
ஒருநாள் கண்டேபா கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது பாபா
அங்கே வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று வணங்கினார்.
பாபா கண்டேபா கோவிலுக்குள் போவதை
பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாபா கண்டேபா சுவாமியின்
விக்ரஹத்துக்குள் ஊடுறுவி விட்டார். மார்த்தாண்ட் விரைந்து சென்று
விக்ரஹத்துக்கு முன்னாலும் பின்னாலும் பாபாவைத் தேடினார். ஆனால் பாபா
அங்கே இல்லை.
'கோவிலுக்குள் வந்த பாபா எங்கே
சென்றார்!' என்று மார்த்தாண்ட் பிரம்மித்து நிற்கையிலே, பாபா மீண்டும்
கண்டேபா விக்ரஹத்தின் உள்ளிருந்து வெளிப்பட்டு மார்த்தாண்டை
புன்சிரிப்புடன் நோக்கிவிட்டு கோவிலின் வெளியே சென்றார்.
அதுநாள்முதல் மார்த்தாண்ட், "தெய்வமும் பாபாவும் ஒன்றே!" என்பதை புரிந்துகொண்டார்.
No comments:
Post a Comment