ஷீர்டி சாய் பாபாவின் மகிமைகள்...
இன்று
பெரும்பாலானவர்கள் ஜோதிடத்தை நம்பியே வாழ்கிறார்கள். செய்யும் ஒவ்வொரு
காரியத்திற்கும் ஜோதிடரின் ஆலோசனையைக் கேட்டே செய்கிறார்கள். ஆனால் பாபாவை
நம்பியிருக்கும்போது, நமக்கு வரும் தீங்குகள் காணாமல் போகும் என்பதை அவரின்
பக்தர்கள் அறிவார்கள். ஒருமுறை 'பாபு சாஹேப்பை பாம்பு தீண்டும்' என்று
பிரபல ஜோதிடரான நானா சாஹேப் சொன்னபோதும், பாபு பாபாவை நம்பி இருந்து ஆபத்து
நீங்கினார் என்பதை நாம் அறிவோம். சாயிநாதனின் பக்தர்கள் ஒருபோதும்
கிரகங்களையும் காலங்களையும் கண்டு அஞ்சவேண்டியதேயில்லை என்பதை உணர்த்தும்
சம்பவம் ஒன்று சாவித்ரிபாயி வாழ்வில் நிகழ்ந்தது.
பாந்த்ராவில்
வாழ்ந்த டெண்டுல்கர் என்பவரின் மனைவி சாவித்ரி பாயி, பாபாவின் மேல்
மிகுந்த நம்பிக்கை கொண்ட பெண்மணி. ஆனால் அவரின் மகனான பாபு டெண்டுல்கருக்கு
அத்தனை நம்பிக்கையில்லை. பாபு டெண்டுல்கர் மருத்துவராகும் பொருட்டு
அதற்கான பரீட்சைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தான். படிப்பில்
கெட்டிக்காரனாக இருந்தும் அவனுக்குத் தன் திறமையின் மீதே சந்தேகம்
ஏற்பட்டது.
பாபுவுக்கு
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. உள்ளூரில் பெயர்பெற்ற ஜோதிடர்களை
அழைத்து 'தான் எழுதும் தேர்வு எப்படியிருக்கும்' என்பது குறித்து கேட்டான்.
சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஒன்றுபோல பலன் சொன்னார்கள். 'இந்த ஆண்டு கிரக
நிலைகள் சரியில்லை' என்றும் 'அடுத்த ஆண்டு மிகவும் சாதகமாக இருப்பதால்,
இந்த ஆண்டு தேர்வு எழுதாமல் இருப்பது நல்லது' என்றும் தெரிவித்தனர்.
பாபு,
ஓர் ஆண்டு வீணாகக் கழிப்பது குறித்து கவலைகொண்டார். மகனின் இந்தத்
தவிப்பைக் கண்ட சாவித்ரி பாயி, ஷீர்டிக்குப் பயணமானார். சாயிநாதனைக் கண்டு
அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். அவருக்கு பிரசாதம் வழங்கிய சாயி,
'அவள் வேண்டுவது என்ன' என்று கேட்டார். உடனே சாவித்ரி தன் மனக்குறையை
இறக்கிவைத்தார்.
No comments:
Post a Comment