ஆன்மிகப் பாதையில் முன்னேற
முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய
சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க
வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது
சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு
ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது. இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட
தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும்.
லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால்
அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல்
நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.
No comments:
Post a Comment