Sunday 29 December 2019

பார்க்குமிடங்களெல்லாம் ஸாயீயே தெரிவார்


Image may contain: 1 person, smiling, closeup

ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களிலிருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய ஸாயீபக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்).
ஸாயீயே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்டபிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா?
பார்க்குமிடங்களெல்லாம் அவருக்கு ஸாயீயே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் ஸாயீ இல்லாத இடமே இல்லாமல் போய்விடும்.
ஸாயீயின் நாமத்தை வாயிலும், பிரேமையை இதயத்திலும் தரித்து, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும் ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், ஸாயீயே அவரை எப்பொழுதும் ரட்சிப்பார்.

Friday 27 December 2019

பாபா சரணாகதி மந்திரம்



இன்று மட்டுமல்ல என்றென்றும், இப்பிறப்பில் மட்டுமல்ல இனி வரப்போகும் பிறவிகளிலும், உமக்கு எந்தவிதமான தீங்குமிழைக்க முடியாது. யாம் அதைப் பார்த்துக் கொள்கிறோம்" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா ( பாபா தனது பக்தரான மகால்சாபதியிடம் கூறிய வார்த்தைகள் இவை. இவ்வார்த்தைகள் மஹல்சாபதிக்கு மட்டுமல்ல, தம்மை வழிபடும் ஒவ்வொரு பக்தனுக்கு என்றென்றுக்கும் அளிக்கப்பட்ட சரணாகதி மந்திரம் )

Tuesday 10 December 2019

ஸாயீயின் சரித்திரம்


Image may contain: 1 person
"ஸாயீயின் சரித்திரம் ஆழங்காண முடியாத சமுத்திரம். அவருடைய கதைகளுக்கு உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரமாவது அளித்து,  செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கி கொள்ளுங்கள் ! அஹங்காரம் அணுவளவும் இன்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்பீர்கள் !"

Wednesday 4 December 2019

ஸாயீயின் கதைகள்



"ஸாயீயின் கதைகள் அபூர்வமானது ! சொல்பவரும் கேட்பவரும் பாக்கியசாலிகள் !  இருசாராரும் ஆடாது அசையாது அமர்ந்து கதைகளில் மூழ்கினால் என்றும் அழியாத மகிழ்ச்சி எய்துவார்கள் !"

"நிந்தைகளையும்,  பொய்களையும்,  கெட்ட கதைகளையும் கேட்ட பாவம் ஒழிந்துபோகும்!"

"எப்பொழுதும் புனிதமானதும் தூய்மை அளிப்பதுமான பாபாவின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக ! மீண்டும் மீண்டும் கேட்போமாக !"

"ஸாயீயின் கருணை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுவதை இந்தக் கதைகளை பயபக்தியுடன் கேட்பவர்கள் மட்டுமே உணர்வார்கள் !"

Sunday 1 December 2019

ஸாயீ அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார்


Image may contain: 1 person, standing

"ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவர் அல்லர் ; அவர் அனைத்து  உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார் ;   பிரம்மதேவரிலிருந்து, ஈ,  எறும்பு ,  பூச்சி, புழு உட்பட அனைத்து ஜீவன்களுக்குள்ளும் மற்றும் எங்கும் உறைபவர் ஸாயீ !"

"ஸாயீ பூரணமான சப்த வேதங்கள் ;  ஸாயீயே பரப்பிரம்மத்தின் அடையாளம் ;  ஸாயீயே எல்லா வகையிலும் தலைசிறந்த ஸத்குரு !"