Monday 10 February 2020

நடப்பதெல்லாம் பாபாவின் செயல்




பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே பாபாவை வழிபட வேண்டும். சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே. அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறாரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள். நடப்பதெல்லாம் பாபாவின் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள். 'நீரே கதி' என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.

No comments:

Post a Comment