பட்டினியாய் இருப்பது நன்றன்று. மனம், உடல், ஆரோக்கியம் மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு புனிதமான நாளில் எனது குழந்தைகள் பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது .- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
உடலை வருத்தி தன் மீதான
பக்தியை நிரூபிக்க பாபா ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இன்று கடைகளில்
கிடைக்கும் பாபா விரத கதைகள் எல்லாம், பாபா மறைந்த பிறகு
உருவாக்கப்பட்டவை. பாபா உடலை விட்டு பிரியும் சமயத்தில் கூட தனது
பக்கதர்களை உணவருந்திவிட்டு வரும்படி கட்டளையிட்டார். தனது குழந்தைகள்
மீதான பாபாவின் அன்பு அத்தகையது. ஆனால் பாபா தன் கதைகளை படிப்பவர்கள் ,
தனது நாமத்தை சொல்பவர்களை எப்போதும் கூடவே இருந்து பாதுகாப்பதாக
உறுதியளித்துள்ளார். ஆகவே, இன்று பாபாவிற்கு விருப்பம் இல்லாத விரதம்
இருக்காமல், பாபாவிற்கு பிடித்தமான சாய் சத்சரித்திரம் படித்து சாயி
நாமஜபத்தில் ஈடுபடுவோம். ஓம் சாய்ராம்.
No comments:
Post a Comment