ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்
( ஸ்ரீ தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரம் )
ஸ்ரீ நரசிம்ம சரசுவதி அஷ்டகம்
இந்து கோடி தேஜ கிர்ண சிந்து பக்தவத்சலம்
நந்தனாத்ரி சூனுதத்த இந்திராட்ச ஸ்ரீகுரும்
கந்த மால்ய அக்ஷதாதி வ்ருந்த தேவ வந்திதம்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
மோஹ பாச அந்தகார சாயதூர பாஸ்கரம்
ஆஹிதாக்ஷ பாஹீஸ்ரீய வல்லபேச நாயகம்
ஸேவ்ய பக்த வ்ருந்த வரத பூயோ பூயோ நமாம்யஹம்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
சித்தஜாதவர்கஷ்டக மத்தவார்ணாங்குசம்
ஸத்வஸார சோபிதாத்ம தத்தஸ்ரீயாவல்லபம்
உத்தமாவதார பூத கர்த்ரு பக்தவத்சலம்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
வ்யோம வாயுதேஜ ஆப பூமி கர்த்ருமீச்வரம்
காமக்ரோத மோஹரஹித ஸோம சூர்யலோசனம்
காமிதார்த்த தாத்ருபக்த காமதேனு ஸ்ரீகுரும்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
புண்டரீக ஆயதாக்ஷ குண்டலேந்து தேஜஸம்
சண்டதுரித கண்டனார்த்த தண்டதாரி ஸ்ரீகுரும்
மண்டலீக மௌலி மார்தாண்ட பாசிதானனம்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
வேத சாஸ்திர ஸ்துத்ய பாதமாதிமூர்த்தி ஸ்ரீகுரும்
நாத பிந்து கலாதீத கல்பபாத ஸேவ்யயம்
ஸேவ்ய பக்த வ்ருந்த வரத பூயோ பூயோ நமாம்யஹம்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
அஷ்டயோக தத்வ நிஷ்ட துஷ்டஞான வாரிதிம்
கிருஷ்ணவேணி தீரவாஸ பஞ்சநதி ஸங்கமம்
கஷ்ட தைன்யதூர பக்த துஷ்டகாம்யதாயாகம்
வந்தயாமி நரசிம்ஹ சரசுவதீச பாஹிமாம்
நரஸிம்ஹ ஸரஸ்வதீச அஷ்டகம்ச ய: படேத்
கோர சம்ஸார சிந்து தாரணாக்ய ஸாதனம்
ஸார ஞான தீர்க்க ஆயு ஆரோக்யாதி ஸம்பதம்
சாருவர்க காம்ய லாப நித்யமேவய: படேத்
எப்பொழுதும் இந்த
நரசிம்ம சரசுவதி அஷ்டகத்தை எவனொருவன் படிப்பானோ அவனுக்கு ஞானமும்,
நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் , எல்லா செல்வங்களும் நான்கு விதமான
புருஷார்த்தங்களும் பெற்று சம்ஸாரமென்ற கடலைத் தாண்டுவதற்கு ஏதுவாக
இருக்கும்.
குருவை முழுமையான
நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும்.
அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம்.
அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.
ஸ்ரீ குரு
சரித்திரத்தை நம்பிக்கையுடன் படிப்பவர்களின் துயரங்கள் அனைத்தும் விலகும்.
இது நம் ஸ்ரீ நரசிம்ம சரசுவதி சுவாமிகளின் சாத்தியவாக்கு. சப்தாக
பாராயணம் ( 7 நாட்களுக்குள் புத்தகத்தை படித்து முடித்தல்) செய்வதன் மூலம்
எல்லா விதமான நேர்மையான கோரிக்கைகளும் நிறைவேறும்.
ஸ்ரீ குருச்சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்...
"பக்தவத்சலனான சத்குரு
தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச்
சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான
பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான
பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக
கிடைக்கும்."
*ஜெய் சாயிராம்*
No comments:
Post a Comment