ஸாயீஸத்சரித்திரம்
வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று ; ஆத்மானந்தத்தின் ஜீவனாகும். இதை
தயாஸாகரமான ஸாயீமகாராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன்
பொழிந்திருக்கிறார் !.
இவ்வுலக வாழ்வை
சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன்
செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதே
இக்காதைகளின் (இச்சரித்திரத்தின் ) நோக்கம்.
ஸாயீயின் காதைகளைப்
பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்க்கையில் உயர்ந்த மேன்மையை அடைவார்கள்.
அவர்களுக்கு ஸாயீயின் பாதங்களின்மேல் பக்தி வளர்ந்து சந்தோஷமென்னும்
பெருநிதி அவர்களுடையதாகும்.
ஸாயீயின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்காதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை நினைவு கொள்வார்கள்.
ஸாயீயின் காதைகள்
எப்பொழுதெல்லாம் காதில் விழுகின்றனவோ, அப்பொழுதுதெல்லாம் ஸாயீ கண்முன்னே
தோன்றுவார். அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும்
சிந்தனையிலும் இரவுபகலாக நிலைத்துவிடுவார். கனவிலும் நனவிலும்
உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன்
தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும்
நீர் எங்கு சென்றுவந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.
இது ஒரு சரித்திரமன்று;
ஆனந்தக்கிடங்கு; நிஜமான பராமிருதம். பக்தி பா(BHA)வத்துடன் அணுகும்
பாக்கியசாலிகளால்தான் இதை அனுபவிக்க முடியும்.