Saturday 29 February 2020

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் படியுங்கள்





ஸாயீஸத்சரித்திரம் வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று ; ஆத்மானந்தத்தின் ஜீவனாகும்.  இதை தயாஸாகரமான ஸாயீமகாராஜ், பக்தர்கள் தம்மை நினைக்கும் உபாயமாக அன்புடன் பொழிந்திருக்கிறார் !.

இவ்வுலக வாழ்வை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டே, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஜன்மம் எடுத்ததன் பிரயோஜனத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதே இக்காதைகளின் (இச்சரித்திரத்தின் ) நோக்கம்.

ஸாயீயின் காதைகளைப் பிரேமையுடன் கேட்பவர்கள், வாழ்க்கையில் உயர்ந்த மேன்மையை அடைவார்கள். அவர்களுக்கு ஸாயீயின் பாதங்களின்மேல் பக்தி வளர்ந்து சந்தோஷமென்னும் பெருநிதி அவர்களுடையதாகும். 

ஸாயீயின்மேல் பூரணமான பிரேமை கொண்டவர்கள், இக்காதைக் கொத்தால் ஒவ்வொரு படியிலும் ஸாயீயின் பொற்கமலப் பாதங்களை நினைவு கொள்வார்கள்.

ஸாயீயின் காதைகள் எப்பொழுதெல்லாம் காதில் விழுகின்றனவோ, அப்பொழுதுதெல்லாம் ஸாயீ கண்முன்னே தோன்றுவார்.  அவ்வாறு அவர் இதயத்திலும் எண்ணங்களிலும் தியானத்திலும் சிந்தனையிலும் இரவுபகலாக நிலைத்துவிடுவார்.  கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார்.  ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்றுவந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.

இது ஒரு சரித்திரமன்று; ஆனந்தக்கிடங்கு;  நிஜமான பராமிருதம்.  பக்தி பா(BHA)வத்துடன் அணுகும் பாக்கியசாலிகளால்தான் இதை அனுபவிக்க முடியும்.

Saturday 22 February 2020

பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது




பட்டினியாய் இருப்பது நன்றன்று. மனம், உடல், ஆரோக்கியம் மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு புனிதமான நாளில் எனது குழந்தைகள் பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது .- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

உடலை வருத்தி தன் மீதான பக்தியை நிரூபிக்க பாபா ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இன்று கடைகளில் கிடைக்கும் பாபா விரத கதைகள் எல்லாம், பாபா  மறைந்த பிறகு உருவாக்கப்பட்டவை. பாபா உடலை விட்டு பிரியும் சமயத்தில் கூட தனது பக்கதர்களை உணவருந்திவிட்டு வரும்படி கட்டளையிட்டார். தனது குழந்தைகள் மீதான பாபாவின் அன்பு அத்தகையது. ஆனால் பாபா தன்  கதைகளை படிப்பவர்கள்  , தனது நாமத்தை  சொல்பவர்களை எப்போதும் கூடவே இருந்து பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார். ஆகவே, இன்று பாபாவிற்கு விருப்பம் இல்லாத விரதம் இருக்காமல், பாபாவிற்கு பிடித்தமான சாய் சத்சரித்திரம் படித்து சாயி நாமஜபத்தில் ஈடுபடுவோம். ஓம் சாய்ராம்.

Monday 10 February 2020

நடப்பதெல்லாம் பாபாவின் செயல்




பக்தன் தான் சாயியோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே பாபாவை வழிபட வேண்டும். சாயியும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார்.  இவ்வாறான பரஸ்பர சமரசபாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்களும் கேவலம் வெளிவேஷங்களே. அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.  நாம் ஒன்றும் அறியாத குழந்தைகள்.  கோணல் சிந்தனைகளும், உடும்புப்பிடியாக பலவற்றைப் பிடித்துக் கொள்ளுகிற தன்மையும் உள்ள மனதை அவரது பாதங்களில் சமர்ப்பித்து அவர் எப்படி செயல்பட நம்மை அனுமதிக்கிறாரோ அப்படியே நடக்க விட்டுவிடுங்கள். நடப்பதெல்லாம் பாபாவின் செயல் என்ற எண்ணம் உங்கள் மனதில் உதிக்கட்டும். எதையும் நான்தான் செய்கிறேன் என எண்ணாதீர்கள். இந்த நிலைக்கு நீங்கள் மாறும்போது அவர் உங்கள் கைகளை வலியப் பிடித்துக்கொண்டு செயலாற்றுவதை உணர்வீர்கள். 'நீரே கதி' என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.

Monday 3 February 2020

ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்


                         

                          ஸ்ரீ  நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்
                              (  ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரம் )


   ஸ்ரீ நரசிம்ம சரசுவதி அஷ்டகம் 

இந்து   கோடி  தேஜ  கிர்ண  சிந்து  பக்தவத்சலம் 
நந்தனாத்ரி  சூனுதத்த  இந்திராட்ச  ஸ்ரீகுரும் 
கந்த  மால்ய  அக்ஷதாதி  வ்ருந்த  தேவ  வந்திதம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம் 

மோஹ  பாச  அந்தகார  சாயதூர  பாஸ்கரம் 
ஆஹிதாக்ஷ  பாஹீஸ்ரீய  வல்லபேச  நாயகம் 
ஸேவ்ய  பக்த வ்ருந்த  வரத  பூயோ பூயோ  நமாம்யஹம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

சித்தஜாதவர்கஷ்டக  மத்தவார்ணாங்குசம் 
ஸத்வஸார  சோபிதாத்ம  தத்தஸ்ரீயாவல்லபம் 
உத்தமாவதார  பூத கர்த்ரு  பக்தவத்சலம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

வ்யோம  வாயுதேஜ  ஆப  பூமி  கர்த்ருமீச்வரம் 
காமக்ரோத  மோஹரஹித  ஸோம  சூர்யலோசனம் 
காமிதார்த்த தாத்ருபக்த  காமதேனு  ஸ்ரீகுரும் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

புண்டரீக  ஆயதாக்ஷ  குண்டலேந்து  தேஜஸம் 
சண்டதுரித  கண்டனார்த்த  தண்டதாரி  ஸ்ரீகுரும் 
மண்டலீக  மௌலி  மார்தாண்ட  பாசிதானனம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

வேத  சாஸ்திர  ஸ்துத்ய  பாதமாதிமூர்த்தி  ஸ்ரீகுரும் 
நாத  பிந்து  கலாதீத  கல்பபாத  ஸேவ்யயம் 
ஸேவ்ய  பக்த  வ்ருந்த  வரத  பூயோ பூயோ நமாம்யஹம் 
 வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

அஷ்டயோக  தத்வ  நிஷ்ட  துஷ்டஞான  வாரிதிம் 
கிருஷ்ணவேணி  தீரவாஸ  பஞ்சநதி  ஸங்கமம் 
கஷ்ட தைன்யதூர  பக்த  துஷ்டகாம்யதாயாகம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

நரஸிம்ஹ  ஸரஸ்வதீச  அஷ்டகம்ச  ய:  படேத்
கோர  சம்ஸார  சிந்து  தாரணாக்ய   ஸாதனம் 
ஸார   ஞான  தீர்க்க  ஆயு  ஆரோக்யாதி  ஸம்பதம் 
சாருவர்க   காம்ய  லாப  நித்யமேவய:  படேத்   

எப்பொழுதும் இந்த  நரசிம்ம  சரசுவதி  அஷ்டகத்தை  எவனொருவன்  படிப்பானோ  அவனுக்கு  ஞானமும்,  நீண்ட  ஆயுளும் ஆரோக்கியமும் , எல்லா செல்வங்களும்  நான்கு  விதமான  புருஷார்த்தங்களும்  பெற்று  சம்ஸாரமென்ற  கடலைத்  தாண்டுவதற்கு  ஏதுவாக இருக்கும்.

குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.

ஸ்ரீ  குரு சரித்திரத்தை  நம்பிக்கையுடன் படிப்பவர்களின் துயரங்கள் அனைத்தும் விலகும். இது நம்  ஸ்ரீ  நரசிம்ம சரசுவதி சுவாமிகளின்   சாத்தியவாக்கு. சப்தாக பாராயணம் ( 7 நாட்களுக்குள் புத்தகத்தை படித்து முடித்தல்) செய்வதன் மூலம் எல்லா விதமான நேர்மையான கோரிக்கைகளும் நிறைவேறும்.

ஸ்ரீ குருச்சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்...

"பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்."

                                           
                                     *ஜெய் சாயிராம்*

Sunday 2 February 2020

சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்



எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது  இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.

Monday 27 January 2020

பொய் பேசவேண்டாம்




"நான் கூறுவதைக் கேளுங்கள்.  இறைவனை மகிழ்விக்கத் தக்கவகையில் நடந்து கொள்ளுங்கள்.  ஒருபோதும் பொய் பேசவேண்டாம்.  எப்போதும் வாய்மையைக் கடைப்பிடியுங்கள்."

"ஒருபோதும் ஒருவரையும் வஞ்சிக்தாதீர்கள்.  உங்களிடமுள்ள பொருளை உங்கள் சக்திக்கேற்றவாறு நல்ல காரியங்களுக்காக செலவழியுங்கள்."

"இவ்வாறாக நீங்கள் பயனடைந்து, நிறைவாக ஸ்ரீ மந் நாராயணனை காண்பீர்கள்.  என் சொற்களை நினைவில் வைத்து தக்கவாறு நடந்துகொள்ளுங்கள்."

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

Monday 20 January 2020

வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன





குருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ;
மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன;
துன்பமெல்லாம் இன்பமாகிறது ! 
எந்நேரமும் ஸத்குருவின் பாதங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விடுபடுகின்றன ;
வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன;

- ஸ்ரீமத் ஸாயிராமாயணம்

Saturday 11 January 2020

இறந்தவளைப் பிழைப்பித்தது


sai baba hd pic க்கான பட முடிவு

D.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல்   இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின்  ஒரு நாள் விடிகாலை இறந்து போனால்.  பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் " என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.

Friday 3 January 2020

எல்லாப் பாவங்களும் ஒழிய பாபாவின் பாதங்களை வழிபடுங்கள்




மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து இறைவனைக் கூவி அழைக்கிறான். 

கெடுசெயல்களைத் தங்குதடையின்றித் தொடரும்வரை, இறைவனுடைய நாமம் தொண்டைக்கு வருவதில்லை. ஆயினும் முதன்முறையாக இது நிகழ்ந்தவுடன், அவனை ஒரு ஞானியை சந்திக்கும்படி இறைவன் ஏற்பாடு செய்கிறான்.

உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு. க்ஷேத்திராடனத்திற்கும் (புனிதப் பயணத்திற்கும்) விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி. வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே. 

புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார். மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார். 

இதன் பிறகு புலனின்ப ஆசைகள் க்ஷீணமடைந்து (அழிவடைந்து), சிஷ்யன் தூக்கத்திலும் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறான் !   குருவின் அருளால் விவேகம், வைராக்கியம் என்னும் இரட்டைப் பழங்கள் கைக்கு வந்துசேர்கின்றன. 

ஞானிகள் அடியவர்களுக்குக் கற்பகத்தரு ஆவர். அவர்களுடைய புனிதமான ஸந்நிதியில் இருந்துகொண்டு பிரேமையுடன் அவர்களுக்கு ஸேவை செய்தால், சிரமமான முயற்சிகள் எதுவும் தேவையில்லாது செய்துவிடுவர். 

ஆகவே, எப்பொழுதும் ஞானிகளின் உறவை நாடுங்கள். அவர்கள் சொல்லும் கதைகளைக் கேளுங்கள். எல்லாப் பாவங்களும் ஒழிய அவர்களுடைய பாதங்களை வழிபடுங்கள்.