மிகவும் எளிமையான வழியையே பாபா
போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு
சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான்
இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட
இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என
ஏமாற்று வேலைகள் ஏராளம். சதசத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு
படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,
( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால்
போதும். அதாவது பாபாவே எல்லாம் என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த
பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.
( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.
( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம்
நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது
நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.
( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும்
அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா
சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில்
உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.
( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் ,
பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் "சாயி, சாயி " மட்டுமே. இதை உச்சரிக்கும்
இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு
மந்திரம் எதுவும் இல்லை.
( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில்
மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை
அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.