"ஒரு பக்தன் அல்லது பக்தனாய் உயர
நினைப்பவன், முதலில் தன்னைக் கற்புடையவனாகவும், சுத்தமானவனாகவும்
அடியார்க்கு அடியவனாகவும் நேர் கொண்ட சத்திய பார்வை கொண்டவனாகவும் ஆக்கிக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் குருவருளைப் பெறத் தகுதி உண்டாகும்.
இரண்டாவதாக, அன்புக்குரிய குருவின்
மீது தரங்குறையா நம்பிக்கை மிக மிக அத்தியாவசியம். இது பலதரப்பட்ட தெய்வீக
உயர்ந்த அனுபவங்களுக்குக் கொண்டு சென்று கடைசியாய் வெகு உயரத்திலிருக்கும்
"சத்_சித் _ஆனந்தம்" (சச்சிதானந்தம்) எனப்படும் இறைமை பொங்கும் பேரானந்த
இலக்கிற்குக் கொண்டு போய் விடும்.
"ஓரடி உயர்ந்தால் அதுவே எனக்குப் போதும்" என்பது மட்டுமே பக்தனுக்குரிய சரியான குணாதிசயமாகும்.
ஆனால், எல்லாம் வல்ல இறைவனை விளக்கும்
சிக்கலான வேதாந்தத்தைப் பற்றியும் சித்தாந்தத்தைப் பற்றியும் முடிவு
பண்ணிக்கொள்ளும் தேவையே அப்போது எழாது. சீடனாயிருக்கும் நிலையில் இவற்றைப்
பிரித்து அறியும் மூளையெல்லாம் அவனுக்கு இருக்காது.
ஆனால் இந்த ஆன்மீக விசயத்தில்,
தன்னிடம் முழுமையாக சரணடைந்த ஒருவனை ஸத்குரு தூக்கிவிடுகிறார். இவற்றைப்
புரிந்து கொள்ளும் மேம்பட்ட ஞானத்தை அவனுக்குப் புகட்டுவார். அவனுக்கு
உள்ளேயுள்ள விசாலமான மெய்ஞ்ஞானத்துக்கு ஒளியூட்டுவார். இப்படியெல்லாம்
சத்தியத்தின் புரிதலுக்கு பாதை வகுப்பார். சித்தாந்தத்தையும் ,
வேதாந்தத்தையும் அப்போது அவன் உணரலாம். உணர்ந்து அதற்குள் ஐக்கியமாகி
வாழ்ந்தும் விடலாம் !"
பாபா ஒருபக்தரிடம் சொன்னார்:
"ஆன்மீக உயர்வுக்குப் புத்தகங்களாய்
படித்துக் கொண்டிருக்காதே ! அதற்குப் பதிலாய், என்னை உன் மனதில் வை !
உள்மனதில் வை ! வைத்ததோடு நின்றுவிடாமல் எண்ணத்தையும் சிந்தனையையும்
ஒருமுகப்படுத்தி என்னுள் சேர்ந்து விடு! அதுவே போதும் ! உன் உயர்வு
நிச்சயம் !"
No comments:
Post a Comment