பாபா, தனது பூதவுடலை விட்டு
பிரியம்போது கூட பட்டினியாய் இருந்த தனது பக்தர்களை வாடாவிற்கு சென்று உணவு
உண்ணும்படி கூறினார். பாபா என்ற தெய்வீக அவதாரத்திற்கு தனக்காக பக்தர்கள்
விரதம் இருப்பதில் விருப்பமில்லை. இதுவே தாயன்பு. தாயும் நீயே, தந்தையும்
நீயே, உறவும் நீயே, நட்பும் நீயே என்று பாபாவிற்கு தினமும் ஆரத்தி
பாடுகிறோம். அவரே நமக்கு எல்லாம் என்று ஆனபின் அவர்மீது நமது பக்தியை
மெய்ப்பிக்க உடலை வருத்தி விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், சாயி
சாயி என்று தனது பக்தன் கூறும்போது தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும்,
சாயி என்று அழைத்தவுடனே ஷிரிடியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
தனது பக்தன் முன் தோன்றி அவனை காப்பாற்றுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
சாதனைகளிலேயே மிகவும் எளியதும் மிக சிறந்ததுமானது சாயி நாமத்தை உச்சரிப்பதே
ஆகும். ஆகவே சாயி பக்தர்கள் தினமும்
குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, உங்களுக்கு பிடித்த சாயி நாமத்தை (
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி, அல்லது ஓம் சாயிராம் அல்லது சாயி சாயி
அல்லது ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமஹ ஜெய ஜெய சாயி நமோ நமஹ )
சொல்லுங்கள். சாயிபாபா என்ற தெய்வத்தின் மகிமையை வார்த்தைகளால்
எவராலும் விவரிக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அத்தகைய
அனுபவத்தை பெற தினமும் பத்து நிமிடம் சாய் நாமத்தை சொல்லிவாருங்கள்.
உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். நம்பிக்கையோடோ,
நம்பிக்கை இல்லாமல் கூட சொல்லுங்கள். சாயி நாமம் எல்லா நல்ல
மாற்றங்களையும் அளித்து சாயியின் மீது அதீத பக்தி உடையவராக உங்களை
ஆக்கும்.
"தனது பக்தனை எந்த
சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம்
நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து,
வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு
விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்."
No comments:
Post a Comment