தீவிரமான கணபதி பக்தை ஒருத்தி
இருந்தாள். அவள் தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்தாள். எத்தனை
மருத்துவம் பார்த்தும் அவளது தலைவலி நோய் தீரவில்லை.
அவள் பாபாவைப் பற்றி கேள்விப்பட்டு,
ஒருநாள் பாபாவிடம் ஓடோடிவந்து, "பாபா! மருத்துவம் என் தலைக் குடைச்சலோடு
தோற்றுவிட்டது. தாங்கள்தான் மாமருந்து ! தாங்களே கருணை புரியவேண்டும்!"
என்று வேண்டினாள்.
பாபா கருணையுடன் அவளுக்கு தன்
கரங்களால் உதியை அள்ளிக் கொடுத்தார். உதியை வாங்கி தலையில் அணிந்து கொண்ட
மறுநிமிடமே அவள் தலைவலி பறந்துவிட்டது.
பாபாவிடம் கண்ணீர்மல்க கைகூப்பி அவள்
நன்றி சொன்னபோது, பாபாவோ , "அம்மா ! நீ கொடுத்த எத்தனை நைவேத்யங்களைத்
தினமும் தொந்தி புடைக்க உண்டிருக்கிறேன் ! உனக்காக இதுகூட செய்யமாட்டேனா?"
என்றார் அன்புடன்.
"பாபா ! நான் தங்களை முதன்முறையாக
இப்போதுதான் பார்க்கிறேன். அப்படியிருக்க, தொந்தி புடைக்க எப்படி தினமும்
நைவேத்யம் தந்திருக்க முடியும்?" என்று கேட்டாள்.
அதற்கு பாபா , "அம்மா! உள்ளன்புடன் நீ
பூஜிப்பது கணபதியாக, சிவனாக, சத்தியநாராயணனாக இருந்தாலும் அது என்னையே
வழிபட்டதாகும் !" என்றார்.
No comments:
Post a Comment