பாபா கடுமையும் கண்டிப்பும் மிகுந்தவராக துவக்கத்தில் தோன்றலாம். ஆயினும், அவருடைய அன்பு லாபம் எதையும் எதிர்பார்க்காதது.
பொறுமையாகவும் தைரியமாகவும் பாபாவிடம் உறவைத் தொடர்ந்தால் நமக்கு மங்களங்கள் உண்டாகும்.
சாபங்களும், தாபங்களும், சுயநல
நோக்கத்துடன் ஏற்படும் ஆசாபாசங்களும், பாபாவின் ஸத்சங்க நிழலில் நாம்
புகும்போது ஒவ்வொன்றாக மறைந்துவிடும். இதன் பொருட்டு நாம் பாபாவின்
பாதங்களை வணங்க வேண்டும்.
அஹந்தையை விடுத்து விநயத்துடன் பாபாவை
சரணாகதி அடைய வேண்டும். நம் மனத்தில் புதைந்து கிடக்கும் ரகசிய
விருப்பத்தைப் பிரார்த்தனையாக அவரிடம் வெளிப்படுத்த வேண்டும். பாபா
நம்முடைய மனதிற்கு பெரும் திருப்தி அளிப்பார்.
அற்பஞானம் விளைவிக்கும் அகந்தையால்
சிலர் ஆரம்ப காலத்தில் பாபாவின் திருவாய்மொழியை மனக்கோணலுடன் அணுகி
நஷ்டத்திற்கு ஆளாவார்கள். ஆயினும், பின்னர் நம்பிக்கையான விசுவாசம்
ஏற்பட்டால் அவர்களுக்கு மங்களங்கள் விளையும்.
பாபாவின் பாதங்களை கெட்டியாக
பிடித்துக் கொள்பவர் தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி கடைசியில்
கரையற்றப்படுவார் என்பது உறுதி. பாபாவின் ஆற்றல் அளவிடற்கரியது.
No comments:
Post a Comment