Wednesday 24 July 2019

குரு பூர்ணிமாவில் குருநாமம் !!


saibaba க்கான பட முடிவு

உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான ஞானத்தை நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்? குருவால் மட்டும்தான் முடியும். குரு வெளியில் உலகத்தினருக்குப் ஏழையாக, எளியவராக, சிறியவராக, பித்தனாக, தெரியலாம். ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும், யாராலும் அழிக்க முடியாத, அள்ள அள்ளக் குறையாத, ஆனந்தமயமான பேரின்பமாகிய ஞானப் பொக்கிஷம்.

எந்த விதமான காரணமும் இல்லாமல், எந்த விதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல், வெறும் கருணையினால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு , எமது அக வாழ்விற்கு வழிகாட்டி, தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா. இவ்வாறான குரு பூர்ணிமா தினமாகிய வைகாசிப் பூரணை தினத்தில் ஒரு குருநாதரின் பாதங்களின் அருகில் இருப்பதே பூர்வ ஜென்ம புண்ணியமாகும்.

எனவே இவ்வாறான சிறப்பம்சங்கள் பொருந்திய, பூரணை தினத்தில், சர்வ வல்லமை பொருந்திய சப்தரிஷிகள் ஒன்று கூடும் தினத்தில், குரு பூர்ணிமா தினத்தில், குருவினை எண்ணியிருந்தாலே கோடி புண்ணியம், குரு நாமம் ஜெபித்தாலே வினைகள் எல்லாம் தீரும். அவ்வாறெனின், குருவினை சரணடைந்து, குருவுடனிருந்து தியான ஜெபங்களில் ஈடுபட்டு, குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, குரு உபதேசம் கேட்டு, குவினால் வழங்கப்படும் அன்னப் பிரசாதத்தினை உண்ன வாய்ப்புக் கிட்டுமெனின், அது சர்வநிற்சயமாக பூர்வ ஜென்ம புண்ணியங்களின் பலனேயாகும்.

No comments:

Post a Comment